பஹ்ரைன் உதைபந்தாட்ட வீரரை தாய்லாந்து விடுவிக்கவுள்ளது

பஹ்ரைன் உதை­பந்­தாட்ட வீரரை தாய்­லாந்­தி­லி­ருந்து பஹ்­ரை­னுக்கு நாடு­க­டத்த வேண்டும் என்ற நிபந்­த­னை­யினை தாய்­லாந்து கைவிட்­டுள்­ளதால், இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் கைது செய்­யப்­பட்ட பஹ்ரைன் அகதி உதை­பந்­தாட்ட வீரரை தாய்­லாந்து விடு­விக்­க­வுள்­ள­தாக குறித்த வழக்கின் சட்­டத்­த­ரணி தெரி­வித்துள்ளார். பேங்­கொக்­கி­லுள்ள க்லோங் பிரெம் சிறைச்­சா­லையில் 25 வய­தான உதை­பந்­தாட்ட வீரர் ஹகீம் அல்-­அ­ரைபி பல மாதங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே கடந்த திங்­கட்­கி­ழமை இவ்­வ­றி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது. 2014…

உரிய நேரத்திற்கு ஆஜராக வேண்டும்

இலங்கை காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு சொந்­த­மான 33.9 மில்­லியன் ரூபா பணத்தை நம்­பிக்கை மோசடி செய்­தமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ உள்­ளிட்ட 7 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்தபோது, முதல் பிர­தி­வா­தி­யான கோத்தா மன்றில் ஆஜ­ராகி இருக்­க­வில்லை. அத்­துடன் ஆறாம் பிர­தி­வா­தியும் மன்றில் இருக்­க­வில்லை. இந் நிலையில் பெயர் வாசிக்­கப்பட்ட போது 2,3,4,5,7 ஆம் பிர­தி­வா­திகள் மட்­டுமே பிர­தி­ வாதிக் கூண்டில் ஏறினர்.…

காதி நீதிமன்ற கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும்

எமது நாட்டில் தற்­போது 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டமே அமுலில் உள்­ளது. இச்­சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்­ச­ராக இருந்த மிலிந்த மொர­கொ­ட­வினால் இச்­சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. குழுவின் தலை­வ­ராக முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் நிய­மிக்­கப்­பட்டார். சுமார் பத்து வரு­டங்கள் கடந்­து­விட்ட…

வியாபாரத்தில் இஸ்லாமிய பண்புகளும் பண்பாடுகளும்

அப்துல் காலித் முஹம்மது மின்ஹாஜ் முப்தி (காஷிபி)  மனித வாழ்வை நெறிப்­ப­டுத்தி வளப்­ப­டுத்­து­வதில் இறை மார்க்கம் புனித இஸ்லாம் சட்­டங்­க­ளோடு சரி நிக­ராக பண்­பு­க­ளையும், பண்­பா­டு­க­ளையும் இணைத்து வைத்­துள்­ளது. சட்­டங்­களை (அஹ்காம்) மாத்­திரம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதன் மூலம் ஒரு முஸ்லிம் பரி­பூ­ரண முஸ்­லி­மாகி விடு­வ­து­மில்லை. பண்­பா­டு­களை (அஹ்லாக்) மாத்­திரம் கைக்­கொள்­வதன் மூலம் ஒரு முஸ்லிம் முழு­மை­யான முஸ்­லி­மாகி விடு­வ­து­மில்லை. அஹ்­காமும் அக்­லாக்கும் ஒரு நாண­யத்தின் இரு பக்­கங்­களைப் போன்­ற­தாகும்.…