சிலாவத்துறை காணியை விடுவிக்கக்கோரி 4 பிரதேசசபைகளில் பிரேரணைகள் கொண்டுவந்து வலியுறுத்த திட்டம்
மன்னார் சிலாவத்துறை மக்களின் பூர்வீக காணியிலிருந்து கடற்படையினர் வெளியேற வேண்டுமென்ற ஒரு பிரேரணையை கொண்டுவந்து அவற்றை ஐனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுமென நான்கு பிரதேச சபை தவிசாளர்களும் உறுப்பினர்களும் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர். மன்னார் சிலாவத்துறை மக்களின் நில விடுவிப்பதற்கான தொடர் போராட்டம் நேற்று ஏழாவது நாட்களாக சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்னால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இப்போராட்டத்தின்போது நேற்று முன்தினம் முன்னாள் வட மாகாண சபை…