இந்திய விமானி இன்று விடுவிக்கப்படுகிறார்

அமைதி மற்றும் நல்­லெண்ண அடிப்­ப­டையில் அபி­நந்தன் நாளை (இன்று) விடு­விக்­கப்­ப­டுவார் என பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் நேற்று அறி­வித்­துள்ளார். நேற்று முன்­தினம் பாகிஸ்தான் வான் பரப்­புக்குள் நுழைந்த இந்­திய போர் விமா­னத்தை பாகிஸ்தான் சுட்­டு­வீழ்த்­தி­யது. இதில் இந்­திய விமா­னி­யான அபி­நந்தன் கைது செய்­யப்­பட்டார். இவரை கடந்த இரு தினங்­க­ளாக பாகிஸ்தான் மிகவும் கண்­ணி­ய­மாக நடாத்­தி­வந்த நிலையில் அவரை நல்­லெண்ண அடிப்­ப­டையில் விடு­தலை செய்யத் தீர்­மா­னித்­துள்­ள­தாக பாகிஸ்தான் பிர­தமர்  இம்ரான் கான் நேற்­றைய தினம்…

அம்பாறை பள்ளிவாசல் தாக்குதலுக்கு ஒரு வருடம் பூர்த்தி: 27 மில்லியன் நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும்

அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் உட்­பட அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை தொடர்ந்தும் கால தாம­தப்­ப­டுத்­தாமல் விரைவில் பெற்­றுத்­த­ரு­மாறு பாதிக்­கப்­பட்ட சொத்­து­களின் உரி­மை­யா­ளர்­களும் பள்­ளி­வா­சலின் முன்னாள் நிர்­வாக சபைத்­த­லை­வர்­களும் அமைச்­சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் சேதம் 4 ½ கோடி ரூபாவென அப்­போ­தைய நிர்­வாக சபை­யினால் மதிப்­பீடு…

பின்லாந்தில் பள்ளிவாசலொன்றின் மீது புகைக் குண்டுத் தாக்குதல்

வடக்கு பின்லாந்தில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை புகைக் குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டதாக பின்லாந்து பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய நபர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒலு நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலின் ஜன்னலை உடைத்துவிட்டு அதனூடாக புகைக் குண்டு வீசியுள்ளதாக ஒலு நகரப் பொலிஸ் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் காரணமாக உடமைகளுக்கு மாத்திரமே சேதம் ஏற்பட்டுள்ளது, உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மெளலவி ஆசிரியர் விவகாரம் 179 வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம்

நாடெங்­கி­லு­முள்ள அர­சாங்க பாட­சா­லை­களில் 179 மௌலவி ஆசி­ரியர் வெற்­றி­டங்­களே நில­வு­கின்­றன. எழுத்துப் பரீட்­சை­யொன்று நடாத்­தப்­பட்டு விரைவில் மௌலவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்­கப்­படும் என கல்வி அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார். நீண்­ட­கா­ல­மாக வழங்­கப்­ப­டா­துள்ள மௌலவி ஆசி­ரியர் நிய­மனம் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் தெரி­விக்­கையில், இந்­நி­ய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கு விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டு 28…