ஹெரோயின், கொக்கையின், கஞ்சா போதைப் பொருட்களுடன் முதல் 3 மாதங்களில் 13298 பேர் கைது
இந்த வருடத்தின் முதல் 3 மாத காலப்பகுதியில் 2340 கிலோ நிறையுடைய ஹெரோயின், கொக்கையின், கஞ்சா போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட ஒரு தொகை கொக்கையின் போதைப்பொருள் அழிக்கப்படும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
இதன் போதே அவர் ஊடகங்களுக்கு மேற்படி தகவலைத் தெரிவித்தார். இவ்வருடத்தில் கடந்த மார்ச் 28 ஆம் திகதி வரையான தகவல்களை மையப்படுத்தியே பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர இதனை தெரிவித்தார்.…