பள்ளிவாசல் மத்ரஸா பதிவுகள்: விண்ணப்பங்களை வக்பு சபைக்கு அனுப்புக
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் நடமாடும் சேவைகளினூடாகப் பெற்றுக்கொள்ளப்படும் அரபு மத்ரஸாக்கள், தக்கியாக்கள் மற்றும் பள்ளிவாசல்களின் பதிவுகள் தொடர்பான விண்ணப்பங்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக உடனடியாக வக்பு சபைக்கு அனுப்பிவைக்குமாறு வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ். எம். எம். யாஸின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரபு மத்ரஸாக்கள், தக்கியாக்கள் மற்றும் பள்ளிவாசல்களைப் பதிவுசெய்வதற்கான ஆவணங்களைப்…