சிரியா வான் தாக்குதலில் நால்வர் பலி
கடந்த சனிக்கிழமை சிரியாவின் வடமேற்கு இட்லிப்பில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 4 பொதுமக்கள் உயிரிழந்ததாக வெள்ளைத் தலைக்கவச சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
இட்லிப்பின் ஜிஸ்ர் அல்-சுகுர் மாவட்டத்தில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டோரை தேடிக் கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு அணியினரை இலக்கு வைத்து போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தலைக்கவச சிவில் பாதுகாப்பு முகவரகத்தின் தலைமை அதிகாரி முஸ்தபா…