வட கொரிய தலைவரின் சகோதரர் கொலையின் சந்தேக நபர் விடுதலை
வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கொலை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இந்தோனேஷியப் பெண்ணை மலேஷிய நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலுமிருந்தும் விடுவித்துள்ளதாக மலேஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்டுள்ள இரசாயன ஆயுதமான வீ.எக்ஸ். எனும் நரம்பு மூலம் செலுத்தப்படும் இரசாயனத்தின் மூலம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து கடந்த 2017 பெப்ரவரி 13 ஆம் திகதி நஞ்சூட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 27…