ரோஹிங்ய அகதிகளை இடம் மாற்றும் திட்டம் நெருக்கடிகளை உருவாக்கும்
அடிக்கடி புயல் தாக்கம் ஏற்படுகின்ற மக்கள் வசிக்காத பகுதியில் 23,000 அகதிகளை அடுத்த மாதம் குடியமர்த்துவதற்கான திட்டத்தை பங்களாதேஷ் தொடருமானால் அது புதிய நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய ஆபத்து உருவாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான தூதுவர் எச்சரித்துள்ளார்.
அண்மையில் பஹாசன் சார் பகுதிக்கு விஜயம் செய்திருந்த மியன்மார் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பெண் அறிக்கையாளரான யங்ஹீ லீ கடந்த திங்கட்கிழமை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வங்காள விரிகுடாவிலுள்ள குறித்த தீவு…