புத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்
புத்தளம் அறுவாக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்திற்கு எதிராக அம் மாவட்ட மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் 200 நாட்களை எட்டியுள்ள நிலையில் குறித்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நாட்களும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
இந் நிலையில் புத்தளம் மாவட்ட மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும் ஆபத்தாகக் கருதப்படும் இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான பல்வேறுபட்ட முயற்சிகளையும் அப் பகுதி மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இப் போராட்டத்திற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள புத்தளம் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய 'க்ளீன் புத்தளம்'…