கிழக்கு இந்தோனேஷியாவில் வெள்ளப்பெருக்கு 70 பேர் பலி
இந்தோனேஷியாவின் கிழக்கு மாகாணமான பபுவாவில் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளின் காரணமாக குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் நாட்டின் தேசிய அனர்த்த முகாமைத்துவ முகவரகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அடை மழை மற்றும் மண்சரிவுகளின் காரணமாக மாகாணத் தலைநகரான ஜயபுராவிற்கு அருகிலுள்ள சென்டானி நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ முகவரகத்தின் பேச்சாளர் சுடோபோ…