ஐ.தே.மு. ஜனாதிபதியுடன் கூட்டமைத்த அரசு கசப்பான அனுபவங்களையே தந்தது
ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவையும் சேர்த்துக்கொண்டு அமைத்திருந்த அரசாங்கம் கசப்பான அனுபவங்களையே பெற்றுத்தந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில், கலேவலயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் புதிய அலுவலக கட்டடத்தின் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு…