புல்மோட்டையில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள்
புல்மோட்டையில் தென்னமரவாடிக்கு அண்மையாகவுள்ள பகுதியில் இரண்டு புதிய சிங்கள குடியேற்றங்கள் சட்டவிரோதமான முறையில் உருவாக்கப்பட்டு வருகின்றமை தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
'PEARL action' என்ற ஆய்வு நிறுவனம் கடந்த வாரம் புல்மோட்டையை அண்டிய பகுதியில் நடைபெற்றுவரும் சிங்களமயமாக்கல் சம்பந்தமாக ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் வடக்கு கிழக்கின் எல்லையில் தமிழ் கிராமங்களை அபகரித்து…