அருகிவரும் நீர் வளத்தை பாதுகாப்போம்
எம்.எப்.எம். இக்பால்
யாழ்ப்பாணம்
நீர் என்பது உயிரின் ஆதாரமாகும். அது இயற்கையின் கொடையாகும். நீர் இல்லையேல் மண் காய்ந்துவிடும். உணவு உற்பத்தி இருக்காது. மண்ணும் காற்றும்கூட நீரின்றேல் வறண்டு போய்விடும். ஆக, எல்லா இயற்கை வளங்களுக்கும் மனித வளத்திற்கும் தாய் வளம் நீராகும். நீர் பல வழிகளிலும் மனிதனுக்குப் பயன்படுகிறது. எமது உடலின் உள்ளேயும் அதிகளவு நீருள்ளது. குருதி, நிணநீர், பாய்பொருள் முதலியவற்றின் கூறாகவும் நீர் அமைந்துள்ளது.
முன்னைய காலங்களில் தூய நீருக்கான…