புல்மோட்டையில் பொதுமக்களின் காணிகளை அளவிட நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் நில அளவீடு செய்துள்ளதாகவும், இது காணிகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட முயற்சி எனவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை 10.30 மணியளவில் புல்மோட்டை பகுதிக்குள் பிக்குவின் தலைமையில் நில அளவை அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் குறித்த பகுதிகளை இனம் கண்டு அறிக்கை…