பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசாங்கம் விலகிவிடாது

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று தேவா­ல­யங்­க­ளையும், நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளையும் இலக்­கு­வைத்து இடம்­பெற்ற பாரிய குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் குறித்து அர­சாங்கம் கவ­லை­ய­டை­கின்­றது. அதே­வேளை இவ்­வி­டயம் தொடர்­பான பொறுப்­புக்­கூ­றலில் இருந்து அர­சாங்கம் ஒரு­போதும் விலகப் போவ­தில்லை. இந்தத் தொடர் குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் மற்றும் அதனால் ஏற்­பட்ட அழி­வுகள் குறித்து அர­சாங்கம் முழு­மை­யாகப் பொறுப்­பேற்றுக் கொள்­கின்­றது. அதே­வேளை இத்­த­கைய தாக்­குதல் சம்­பவம் இடம்­பெ­றப்­போ­வ­தாக முன்­னரே எச்­ச­ரிக்கை…

ஈஸ்ட்டர் தாக்குதலில் பலியானோர் தொகை 290 ஆக அதிகரிப்பு

எம்.எப்.எம்.பஸீர், தம்­புள்ளை நிருபர் தலை நகர் கொழும்பு உட்­பட நாட்டில் நேற்று முன் தினம் இடம்­பெற்ற 8 தொடர் குண்­டு­வெ­டிப்­புக்­களில் கொல்­லப்­பட்­டோரின் எண்­ணிக்கை 290 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதில் மேலும் காய­ம­டைந்த 500 பேர் வரையில் 6 வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ரனர். இந் நிலையில் குண்டுத் தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழந்த 290 பேரில் நேற்று வரை 204 பேரின் சட­லங்கள் அடை­யாளம் காணப்­பட்டு சட்ட நட­வ­டிக்­கைகள் பூர்த்தி செய்­யப்­பட்­ட­தாக சுகா­தார பணிப்­பாளர் நாயகம் வைத்­தியர் அனில் ஜய­சிங்க தெரி­வித்தார்.…

அமெரிக்காவுக்கான சவூதி அரேபிய தூதுவராக இளவரசி ரீமா பதவியேற்பு

அமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூலம் இரா­ஜ­தந்­திர வர­லாற்றில் புதிய அத்­தி­யாயம் ஒன்றை அவர் தோற்­று­வித்­துள்ளார். ரியாதில் அமைந்­துள்ள அல்-­யெ­மாமாஹ் அரண்­ம­னையில் மன்னர் சல்மான் முன்­னி­லையில் இள­வ­ரசி ரீமா சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொண்டார். இதன்­மூலம் சவூதி அரே­பி­யாவின் முத­லா­வது பெண் தூது­வ­ராக இவர் வர­லாற்றில் இடம்­பி­டித்­துள்ளார். நான் எனது மார்க்­கத்­திற்கும், மன்­ன­ருக்கும் எனது நாட்­டுக்கும்…

முஸ்­லிம்­களின் காணிகள் துரி­த­மாக விடு­விக்­கப்­ப­டுமா?

இலங்­கையில் இரா­ணு­வத்­தினர் வசம் இருந்த காணி­களில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் அண்­மையில் அறி­வித்­துள்­ளது. படை­யி­ன­ரி­ட­மி­ருந்த 84,675 ஏக்கர் காணி­க­ளி­லேயே மேற்­படி தொகை காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. விடு­விக்­கப்­பட்ட காணி­களுள் 81 சத­வீ­த­மா­னவை அர­சுக்குச் சொந்­த­மா­னவை என்றும், 90 சத­வீ­த­மான தனி­யா­ருக்­கு­ரி­யவை எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபி­வி­ருத்­திக்­கான ஜனா­தி­பதி செய­ல­ணியின் 6 ஆவது அமர்வு…