கல்முனை விவகாரம்: அரசியல் குளிர்காய்தல்
கல்முனைத் தொகுதியில் மீண்டும் அரசியல் புயல் உக்கிரமாக வீசத் தொடங்கியுள்ளது. இதனால், கல்முனைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் தலையிடிக்குள்ளாகிக் காணப்படுகின்றார்கள்.