பெற்­றோரால் கத்னா செய்­யப்­பட்ட குழந்தை உயி­ரி­ழப்பு; இத்­தா­லியில் சம்­பவம்

இத்­தா­லியில் ஐந்து மாத ஆண் குழந்­தைக்கு பெற்றோர் வீட்டில் மேற்­கொண்ட கத்னா – விருத்­த­சே­த­னத்­தின்­ போது ஏற்­பட்ட தவறின் கார­ண­மாக அக் குழந்தை உயி­ரி­ழந்­துள்­ள­தாக அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை அக் குழந்­தைக்கு இதயக் கோளாறு ஏற்­பட்ட நிலையில் இத்­தா­லி­யி­லுள்ள பொலொக்னா வைத்­தி­ய­சா­லைக்கு உலங்­கு­வா­னூர்தி மூலம் கொண்டு செல்­லப்­பட்­டது. அன்­றி­ரவு வைத்­தி­ய­சா­லை­யி­லேயே குழந்தை உயி­ரி­ழந்­தது. கானா நாட்­டினைப் பூர்­வீ­க­மாகக் கொண்­ட­வர்கள் எனத் தெரி­விக்­கப்­படும் அக் குழந்­தையின்…

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினராக நஹியா நியமனம்

தேசிய எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ராக ஒய்­வு­பெற்ற இலங்கை நிர்­வா­க­சேவை அதி­கா­ரி­யான ஏ.எம்.நஹியா அர­சி­ய­ல­மைப்பு  பேர­வையின் விதந்­து­ரை­யின்­பேரில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மனம் செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். இந்த நிய­மனம் மார்ச் 11 ஆம் திக­தி­யி­லி­ருந்து நடை­மு­றைக்கு வரும்­வ­கையில் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பொது­நி­ரு­வாக உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் எல்லை நிர்­ண­யக்­கு­ழு­விலும் உள்­ளூ­ராட்சி,  மாகா­ண­ச­பைகள் அமைச்சின் எல்லை நிர்­ண­யக்­கு­ழு­விலும் ஏற்­கெ­னவே…

அவுஸ்­தி­ரே­லிய எதிர்க்­கட்சித் தலைவி துருக்­கிய சமூக பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விஜயம்

சிட்­னியில் வாழும் துருக்­கிய சமூ­கத்­தி­ன­ருக்குச் சொந்­த­மான பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லிய எதிர்க்­கட்­சி­யான தொழிற்­கட்­சியின் பிரதித் தலைவி கடந்த வெள்­ளிக்­கி­ழமை விஜயம் செய்தார். இன்று நான் ரெட்பேர்ன் மற்றும் எர்ஸ்க்­கின்­வில்லே ஆகிய இடங்­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விஜயம் செய்தேன். தலை­வர்­க­ளையும் சமூக உறுப்­பி­னர்­க­ளையும் சந்­தித்தேன். முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஆத­ர­வாக அனைத்து மதங்­களைச் சார்ந்­த­வர்­களும் ஒன்­றி­ணைந்து நிற்­கின்­றனர் என தனது டுவிட்டர் பதிவில் குறிப்­பிட்­டுள்ள எதிர்க்­கட்சித் தலைவி…

சவூதி நலன்புரி நிலையங்களில் இலங்கை பணியாளர்கள் நன்றாக நடத்தப்படுகின்றனர்

தொழில் நிமித்தம் சவூதி அரே­பி­யா­விற்குச் சென்று பிரச்­சி­னைகள் கார­ண­மாக நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்ள இலங்­கை­யர்கள் சிறந்த முறையில் நடத்­தப்­ப­டு­வ­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு, விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹெக்டர் அப்­பு­ஹாமி தெரி­வித்தார்.  குறித்த நிலை­யங்­களில் அவர்­க­ளுக்குத் தேவை­யான வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­ட­வில்­லை­யென சில ஊட­கங்கள் முன்­வைத்த குற்­றச்­சாட்­டையும் அவர் மறுத்தார். வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற…