வெள்ளியன்று பல இடங்களில் ஜும்ஆ தொழுகை இல்லை

நாட்டில் ஏற்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத அச்ச சூழ்­நிலை கார­ண­மாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை நாட்டின் பல இடங்­க­ளில் ஜும்ஆ தொழுகை நடை­பெ­ற­வில்லை. அத்­துடன் ஒரு­சில பகு­தி­களில் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் ஜும்ஆ தொழுகை நடத்­தப்­பட்­டது. கொழும்­பிலும் பல்­வேறு நகர் பகு­தி­க­ளிலும் ஜும்ஆ தொழுகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு சில பள்­ளி­வா­சல்­க­ளி­லேயே நடத்­தப்­பட்­டது. அத்­துடன், மாவ­னெல்லை, புத்­தளம், பேரு­வளை உள்­ளிட்ட பல பள்­ளி­வா­சல்­க­ளிலும் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­ப­ட­லா­மென அச்சம் வெளி­யி­டப்­பட்ட பகு­திகள்…

சரணடைவதற்கு அவகாசம் வழங்குக

தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் தாமா­கவே முன்­வந்து சர­ண­டை­வ­தற்கு 24 அல்­லது 48 மணி­நேர கால­அ­வ­காசம் வழங்­கும்­ப­டியும் அவ்­வாறு சர­ண­டை­பவர்களுக்கு புனர்­வாழ்­வுக்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறும் கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்­களின் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்­மானின் கையொப்­பத்­துடன் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கடி­தத்தில் மேலும்…

இதுவரை நாடு முழுவதும் 155 சந்தேக நபர்கள் கைது

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்­கையில் பதி­வான 8 தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை தொடர்ந்து 155 பேர் நேற்று நண்­பகல் வரை சி.ஐ.டி. உள்­ளிட்ட பல பொலிஸ் பிரி­வி­னர்­களால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். நேற்று பிற்­பகல் 2.00 மணி­யுடன் நிறை­வ­டைந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் பல்­வேறு பிர­தே­சங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட முற்­று­கையின் போது இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இதே­வேளை ஷெங்­ரில்லா மற்றும் சினமன் கிராண்ட் ஆகிய நட்­சத்­திர ஹோட்­டல்­களில் தாக்­குதல் நடத்­திய தற்­கொலை தாரி­க­ளான இன்சாப் மற்றும் இல்ஹாம்…

குருநாகல் மாநகர எல்லைக்குள் புர்கா அணிய முற்றாகத் தடை

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண நிலையை கருத்­திற்­கொண்டு குரு­நாகல் மாந­கர சபையின் கட்­டுப்­பாட்டில் உள்ள இடங்­க­ளுக்கு முஸ்லிம் பெண்கள் புர்கா ஆடை அணிந்து வரு­வ­தற்கு தடை விதிப்­ப­தாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கூட்­டத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாந­கர முதல்வர் துஷார சஞ்­ஜீவ விதா­ரண தலை­மையில் மாந­கர சபையில் விசேட கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது நகர முதல்வர் துஷார சன்­ஜீவ, புர்கா தொடர்­பான பிரே­ர­ணையை முன்­வைத்தார். இதற்கு ஆளும் கட்சி (பொ.ஜ.பெ) எதிர்க்­கட்­சிகள்…