தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டினதும் பொதுமக்களினதும் பாதுகாப்பினை அரசாங்கம் பலப்படுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் வீடுகள் பலத்த சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. சந்தேகத்தின் பேரில் சில பள்ளிவாசல்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் ஒன்று கூடுமிடங்களான ரயில் நிலையங்கள், பிரதான பஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் உட்பட பல முக்கிய இடங்களில்…