உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும்
வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவந்து இலங்கை விவகாரத்தை கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது. உள்நாட்டுப் பொறிமுறை மூலம் யுத்த காலத்தில் நடந்த தவறுகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதில் அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை ருவன்வெல்ல, வெந்தல விஸ்தரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை திறந்துவைத்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.…