முஸ்லிம் சமய விவகார அமைச்சின் நடமாடும் சேவை அநுராதபுரத்தில்
முஸ்லிம் சமய விவகார அமைச்சும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திவரும் நடமாடும் சேவையின் மூன்றாவது கட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அநுராதபுரம் ஸாஹிராக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமயவிவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நடமாடும் சேவையில் அநுராதபுர மாவட்ட அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நடமாடும் சேவைகளில் அநுராதபுர மாவட்ட…