சவூதி அரேபிய மரண தண்டனைகளுக்கு ஐரோப்பிய யூனியன் கடும் எதிர்ப்பு
சவூதி அரேபியாவில் இவ்வாண்டு மரண தண்டனை 45 ஐ தாண்டியுள்ள நிலையில் ஐரோப்பிய யூனியன் சவூதி ஆரேபியாவின் மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவ்வமைப்பின் வெளிநாட்டுக் கொள்கைக்கான தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
எந்தவித புற நடைகளுமின்றி அனைத்துக் குற்றங்களுக்கும் மரண தண்டனையை சவூதி அரேபியா பயன்படுத்தி வருவதனை ஐரோப்பிய யூனியன் ஒருமித்த குரலில் எதிர்ப்பதாக பெட்ரிக்கா மொக்ஹெரினி உத்தியோகபூர்வ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டின்…