அபாயாவை தடை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகிறது. இவற்றில் முஸ்லிம் பெண்களின் கலாசார உடைக்கு பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைத்து முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைக்கு தடைவிதித்து அண்மையில் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டிருந்தார். குறிப்பிட்ட அரச வர்த்தமானி அறிவித்தலில் முழு முகம் என்பதற்கு இருகாதுகளையும் மறைக்கக்கூடாது என…