மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான ஓய்வு பெற்ற அதிபர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்
(கந்தளாய் மேலதிக நிருபர்)
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான ஓய்வு பெற்ற அதிபர், மௌலவி ஏ.எம்.சரஸ்தீன் (வயது 62) தொடர்ந்தும் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கந்தளாய், பேராற்றுவெளி பகுதியைச் சேர்ந்த மௌலவி ஏ.எம்.சரஸ்தீன் நேற்று முன்தினம் இரவு பள்ளிவாசலிலிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னால் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் கந்தளாய் தள…