ஹஜ் யாத்திரிகர்களின் நலனில் அர்ப்பணிப்புடன் செயற்படும் சவூதி
சவூதி அரேபிய இராச்சியம், அதன் நிறுவனர் மன்னர் அப்துல்அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் சஊத் அவர்களது காலத்திலிருந்து, இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் அவர்களின் காலம் வரை, அதிக எண்ணிக்கையிலான ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்களுக்கு இடமளிக்கும் வகையில் இரண்டு புனிதத் தலங்கள் மற்றும் மற்ற புனித இடங்களை விரிவுபடுத்தி, அங்குள்ள வசதிகளை மேம்படுத்தவும், நவீன சேவைகளை வழங்கவும் தொடர்ந்து மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.