அமெரிக்காவுக்கான சவூதி அரேபிய தூதுவராக இளவரசி ரீமா பதவியேற்பு
அமெரிக்காவுக்கான சவூதி அரேபிய தூதுவராக இளவரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். இதன் மூலம் இராஜதந்திர வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை அவர் தோற்றுவித்துள்ளார்.
ரியாதில் அமைந்துள்ள அல்-யெமாமாஹ் அரண்மனையில் மன்னர் சல்மான் முன்னிலையில் இளவரசி ரீமா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்மூலம் சவூதி அரேபியாவின் முதலாவது பெண் தூதுவராக இவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
நான் எனது மார்க்கத்திற்கும், மன்னருக்கும் எனது நாட்டுக்கும்…