அச்சம் நீக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 360ஐ எட்டியுள்ளது. காயமடைந்த சுமார் 160 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகள் வெறிச் சோடிக் காணப்படுகின்றன. மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளதுடன் வெளியில் நடமாடவும் தயங்குகின்றனர். இத் தாக்குதல்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள்…