‘புர்கா’ இலங்கை முஸ்லிம்களுக்கு பொருத்தமான ஆடையல்ல
Q தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அமைப்பொன்று உரிமை கோரியுள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள சவால்கள் என்ன?
தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. 350 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியிருக்கிறார்கள். சுமார் 500 பேர் காயங்களுக்குள்ளாகியிருக்கிறார்கள். இதுவோர் சாதாரண விடயமல்ல, பாரதூரமான விடயமாகும்.
நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்ச உணர்வு எல்லோர் மத்தியிலும்…