வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்து, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் இலக்குவைக்கப்படுகின்றன

மத மற்றும் நம்­பிக்­கைக்­கான சுதந்­திர உரி­மையை மீறும் வகையில் அண்­மைய சில வரு­டங்­க­ளாக இலங்கை அர­சாங்­கத்­தி­னாலும் தேசி­ய­வாத சிங்­கள பௌத்த பிக்­கு­க­ளாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள இந்து மற்றும் இஸ்­லா­மிய மத­வ­ழி­பாட்­டுத்­த­லங்­கள் இலக்­கு­வைக்­கப்­ப­டு­வ­தாக மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­துள்­ளது.

காஸா குழந்தைகள் நிதியத்துக்கு கிழக்கு ஆளுநர் நன்கொடை

காஸாவில் இடம்­பெற்­று­வரும் மோதல்­களில் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு ரம­ழான் மாதத்தில் நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி காஸா நிதி­யத்­திற்கு கிழக்கு மாகாண ஆளு­நரும், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரசின் தலை­வ­ரு­மான செந்தில் தொண்­டமான் 05 இலட்சம் ரூபா நிதியை வழங்­கி­யுள்ளார்.

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கதீப், முஅத்தின், ஏனைய ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க வேண்டும்

பள்­ளி­வா­சலில் கட­மை­யாற்றும் மௌல­வி­மார்கள், கதீப்­மார்கள், முஅத்­தின்­மார்கள் மற்றும் ஊழி­யர்கள் ஆகி­யோ­ருக்கு விசேட கொடுப்­ப­னவு வழங்­கப்­பட வேண்டும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அனைத்து பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

சுன்னத் செய்வதற்கு தடை விதிப்பதாக தேசிய மக்கள் சக்தி கூறவில்லை

தேசிய மக்கள் சக்­தியின் 2019 ஆம் ஆண்டின் கொள்கை வெளி­யீட்டில் முஸ்லிம் மக்கள் சுன்னத் மற்றும் கத்னா செய்­வதை தடை­செய்வோம் என குறிப்­பி­ட­வில்லை என தேசிய மக்கள் சக்­தியின் தேசிய நிறை­வேற்றுப் பேரவை உறுப்­பினர் டொக்டர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.