இதுவரை நாடு முழுவதும் 155 சந்தேக நபர்கள் கைது
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் பதிவான 8 தற்கொலை குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து 155 பேர் நேற்று நண்பகல் வரை சி.ஐ.டி. உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவினர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் 2.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் பல்வேறு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட முற்றுகையின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஷெங்ரில்லா மற்றும் சினமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய தற்கொலை தாரிகளான இன்சாப் மற்றும் இல்ஹாம்…