முகத்தை முழுமையாக மறைக்கவும் தீவிரவாத பிரசாரத்தில் ஈடுபடவும் தடை
நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவது நேற்று முன்தினம் முதல் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விரிவாக விளக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ள 2120/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
அறிவித்தலானது முகத்தை மறைத்து ஆடை அணிவதை தடை செய்வது தொடர்பிலும் இலங்கைப் பிரஜைகளோ அல்லது வெளிநாட்டவரோ இலங்கையில் தீவிரவாத சிந்தனைகளை…