ரமழானை பொறுப்புடன் அனுஷ்டிப்போம்
இலங்கையை மாத்திரமல்ல முழு உலகையும் ஒருகனம் அதிர்ச்சியில் உறைச்செய்த ஏப்ரல் 21 ஆம் திகதிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் உயிர்ப்பலிகள் தொடர்ந்தும் எம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களே கடந்துவிட்ட நிலையில் முஸ்லிம்கள் நாம் இன்று புனித ரமழானில் சங்கமமாகியுள்ளோம்.
‘ரமழான் மாதம் எத்தகையதெனில் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதாகவும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக்…