மியன்மார் சிறையிலிருந்த ஊடகவியலாளர்கள் விடுதலை
ரோஹிங்ய படுகொலைகளை வெளிப்படுத்தியமைக்காக மியன்மாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரொயிட்டர் ஊடகவியலாளர்கள் இருவரும் 500 நாட்களுக்கும் மேற்பட்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்ததன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மியன்மார் இராணுவத்தினரால் 10 ரோஹிங்ய முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை அறிக்கையிட்டதைத் தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரொயிட்டர் ஊடகவியலாளர்களான 32 வயதான வா லோன் மற்றும் 28 வயதான கியவ் ஓஒ ஆகியோர் மீது நாட்டின் உத்தியோகபூர்வ…