அரபா நாளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்
துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களும் இஸ்லாத்தின் பார்வையில் மிகச் சிறந்த தினங்களாகும். ரமழான் மாதத்தின் பிந்திய 10 தினங்களும் சிறப்பு பெறுவதற்கு லைலத்துல் கத்ர் இரவு காரணமாக இருப்பது போல் துல்ஹஜ்ஜின் முதல் 10 இரவுகளும் சிறப்பு பெறுவதற்கு அதில் ஒன்பதாம் தினத்தில் இடம்பெறும் அரபா தினம் காரணமாகும்.