சமூக வலைத்தளங்களை நிதானமாக பயன்படுத்துவோம்
சமூக வலைத்தளங்கள் சமூகத்தின் நலனுக்கும், சமூக மேம்பாட்டுக்குமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், எமது நாட்டில் சமூக வலைத்தளங்கள் இனவாதக் கருத்துக்களையும், உணர்ச்சியூட்டும் இனவாத புகைப்படங்களையும் பதிவேற்றி வருகின்றமை மிகவும் ஆபத்தானதாகும். அண்மைக்காலமாக நாட்டில் இனவாத வன்முறைகள் பரவுவதற்கு சமூக வலைத்தளங்களே காரணமாய் அமைந்துள்ளன.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் சிலாபத்தில் ஒரு பதற்றநிலை உருவாகுவதற்கு முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் முகநூல் பதிவொன்றே காரணமாய்…