அநாவசிய கைதுகள் குறித்து முறையிட ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க ஏற்பாடு
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது அநாவசியமாக இடம்பெற்றுள்ள சந்தேகத்தின் பேரிலான கைதுகள் தொடர்பில் முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை ஒன்றாகச் சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளனர். அவ்வாறான கைதுகள் தொடர்பான பட்டியலொன்று ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கையளிக்கப்படவுள்ளன. சிறிய காரணங்களுக்காக இடம்பெற்றுள்ள அநாவசிய கைதுகள் தொடர்பான…