முஸ்லிம் குடும்பங்களை பாதுகாத்த சிங்களக் குடும்பம் ஒன்றின் கதை
‘‘பெற்றோல் குண்டுச் சத்தம் கேட்டவுடனே எனக்கு மரண பீதியே ஏற்பட்டது. எமது கதை முடிந்து விட்டதென்றே எண்ணினோம். எமது முன்வீட்டு சுஜீவனீ தங்கை எங்களை அவரது வீட்டுக்குள் எடுத்து பாதுகாக்காவிட்டால் எங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம். எங்கள் குடும்பத்துடன் இந்த வீட்டில் மூன்று குடும்பங்களுக்குப் பாதுகாப்புக் கிடைத்தது’’ இவ்வாறு நாத்தாண்டியா, தும்மோதரையைச் சேர்ந்த ஏ.கே. ஹலீமா என்ற பெண் கூறினார்.
கடந்த 13 ஆம் திகதி மேற்படி பகுதியில் முஸ்லிம்களுக்கெதிராக…