கண்டி-தெல்தோட்டையில் தாக்குதலுக்கு திட்டமிட்ட அமித்

வடமேல் மாகாண முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்து அரங்­கேற்­றப்பட்ட வன்­மு­றை­களை அடுத்து மஹ­சொஹொன் பல­காய அமைப்பின் தலைவர் அமித் வீர­சிங்­கவை  சிறப்பு பொலிஸ்­குழு கைது செய்­தி­ருந்­தது. அவர் கைது செய்­யப்­ப­டாது இருந்­தி­ருப்பின்  வடமேல் மாகா­ணத்தில் பதி­வான வன்­மு­றை­களை ஒத்த வன்­மு­றைகள் கண்டி பகு­தி­யிலும் இடம்­பெற்­றி­ருக்­கு­மென முன்­னெ­டுக்­க­ப்படும் விசா­ர­ணை­களில் வெளிப்­படும் சாட்­சி­யங்கள் ஊடாகத் தெளி­வா­வ­தாக விசா­ர­ணை­க­ளுக்குப் பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். இவ்­வாறு கண்டி பகு­தியில்…

திகன வன்முறைகள்: 174 சொத்து சேதங்களுக்கு 17 கோடி ரூபா நஷ்டயீடு

கடந்த வருடம் கண்டி – திகன பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு இது­வரை காலம் நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டா­துள்ள  174 சொத்­து­க­ளுக்கு இன்னும் சில தினங்­களில் 17 கோடி ரூபா நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அங்­கீ­கா­ரத்தை அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்­ளது. புனர்­வாழ்வு அமைச்­சுக்கும் பொறுப்­பான அமைச்­ச­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பணிப்பின் பேரில் நஷ்­டயீடு வழங்கும் பணிகள் புனர்­வாழ்வு அதி­கார சபை (இழப்­பீடு பணி­யகம்) யினால் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.…

ஒரே தினத்தில் நோன்பு பெருநாள் கொண்டாட வேண்டும்

நாட்டில் ஒரே தினத்தில் நோன்புப் பெரு­நாளை கொண்­டாட வேண்­டு­மென அகில் இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அத்­துடன் தாக்­கு­தல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டோரை கருத்­திற்­கொண்டு வீண்  கொண்­டாட்­டங்­களை தவிர்க்­கு­மாறு முஸ்­லிம்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிர­சா­ரக்­குழு செய­லாளர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் வெளி­யிட்­டுள்ள நோன்புப் பெருநாள் தொடர்­பான வழி­காட்டல் அறிக்­கையை இங்கு முழு­மை­யாக தரு­கிறோம்: நாட்டில் நிலவும் அசா­தா­ரண சூழ்­நி­லையைக்…

அரசியல்வாதிகள், அடிப்படைவாதிகள் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பு

பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு நாட்டின் அமை­தியை சீர்­கு­லைக்க சில அர­சி­யல்­வா­தி­களும் அடிப்­ப­டை­வா­தி­களும் செயற்­பட்டு வரு­கின்­றனர். இவர்கள் தொடர்பில் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அத்­துடன் பயங்­க­ர­வா­தத்­துக்கு முகங்­கொ­டுக்கத் தேவை­யான சட்ட திட்­டங்­களை மேற்­கொள்ள அர­சாங்கம் தயா­ராக இருக்­கின்­றது என அரச நிர்­வாக மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் மத்­தும பண்டார தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில்…