ஏப்ரல் 21: இனி நடக்க வேண்டியது குறித்து சிந்திப்போமா?
ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டித்தது.
தாக்குதலில் பலியான அப்பாவி பொதுமக்களுக்காக கண்ணீர் வடித்தது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. சாய்ந்தமருதில் மறைந்திருந்த தீவிரவாதிகளை படைத் தரப்புக்கு காட்டிக் கொடுத்தது. தற்கொலைத் தாக்குதல்தாரிகளின் உடலை முஸ்லிம் சமூகம் பொறுப்பேற்க மறுத்தது. முஸ்லிம்களை நல்லடக்கம் செய்யும் மையவாடியில் தீவிரவாதிகளுக்கு இடமில்லை…