கெக்கிராவையில் தௌஹீத் பள்ளியின் முகப்பு அகற்றம்

கெக்­கி­ராவை மடாட்­டு­க­மயில் இயங்கி வந்த தௌஹீத் அமைப்­பி­னரின் சிறிய பள்­ளி­வாசல் ஒன்றின் முகப்­பினை பிர­தேச முஸ்லிம் மக்கள் பெரிய ஜும்ஆ பள்­ளி­வா­சலின் ஒத்­து­ழைப்­புடன் உடைத்து அப்­பு­றப்­ப­டுத்­தி­யுள்­ளனர். மடாட்­டு­கம பகு­தியில் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்கள் முஸ்­லிம்­க­ளுடன் முரண்­படும் சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருந்த நிலை­யிலே அதனைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே பள்­ளி­வா­சலின் முகப்பு உடைத்து அகற்­றப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நூல­க­மொன்­றாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட்­ட­டமே பள்­ளி­வா­ச­லாக…

அரேபிய, ஷரீஆ சட்டங்களை நாட்டில் அமுல்படுத்த முடியாது

‘நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் ஒரு சட்­டமே அமுலில் உள்­ளது. சமய ரீதியில் சட்­டங்கள் மாறு­ப­ட­மாட்­டாது. அரபு மொழி, அரே­பிய சட்டம் மற்றும் ஷரீஆ சட்டம் என்­ப­ன­வற்றை ஒரு போதும் இந்­நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது’ என உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­தன தெரி­வித்தார். உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சில் நடை­பெற்ற அரச அதி­கா­ரி­களைத் தெளிவு படுத்தம் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும்…

நாத்தாண்டி வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 31 பேருக்கு பிணை

கொஸ்­வத்த பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நாத்­தாண்­டிய, - கொட்­டா­ர­முல்லை பகு­தியில் கடந்த 13  ஆம் திகதி முஸ்­லிம்­களை இலக்கு வைத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட வன்­மு­றைகள் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 31 பேர் நேற்று பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர். மார­வில நீதிவான் நீதி­மன்றில் அவர்கள் ஆஜர் செய்­யப்­பட்ட போதே,  தலா 50 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணை­களில் அவர்கள் விடு­விக்­கப்­பட்­டனர். இதற்­கான உத்­த­ரவை மார­வில நீதிவான் சிரி­மெவன் மகேந்ர ராஜா பிறப்­பித்­துள்ளார். நேற்­றைய தினம் முன் வைக்­கப்­பட்ட விட­யங்­களை ஆராய்ந்தே…

சிரியா அரச படைகளின் தாக்குதலில் 24 பேர் பலி

சிரி­யாவில் எதிர்த்­த­ரப்பின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள இட்லிப் மாகா­ணத்தில் பஷர் அல்-­அ­சாத்தின் அர­சாங்கப் படை­யினர் மேற்­கொண்ட தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 24 ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக வெள்ளைத் தலைக்­க­வச சிவில் பாது­காப்பு முக­வ­க­ரகம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அறி­வித்­தது. அர­சாங்கப் படை­யி­னரும் ஈரான் ஆத­ர­வு­ட­னான ஆயு­த­தா­ரி­களும் கான் ஷயக்குன், கப்ர் நப்ஸல், அல்-­ஹொபைத் மற்றும் லதா­மினாஹ் உள்­ளிட்ட இட்லிப் மற்றும் ஹாமா மாகா­ணங்­களின் கிரா­மியப் பகு­தி­களை இலக்கு வைத்­த­தாக அம் முக­வ­க­ரகம்…