வன்முறையாளர்கள் விடுவிக்கப்படுவது நியாயமா?
மே மாத நடுப் பகுதியில் குருநாகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மினுவாங்கொடை பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் அவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு வருகின்றமை பலத்த அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.
மேற்படி பிரதேசங்களில் சுமார் 25க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் இரு தினங்களில் தாக்குதலுக்குள்ளாகின. இத் தாக்குதல் சம்பவங்களில் சுமார் 2000 இற்கும் அதிகமானோர் பங்கேற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட பொது மக்கள்…