சுற்றுநிருபத்தில் உடன் திருத்தம் வேண்டும்
ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் முஸ்லிம்களுக்குப் பல சவால்களை ஏற்படுத்தியுள்ளன. முஸ்லிம் பெண்களின் கலாசார உடையை அடிப்படைவாதிகளின் சின்னமாகக் கருதிய பேரினவாதிகள் பலத்த எதிர்ப்புகளை வெளியிட்டனர்.
புர்கா மற்றும் நிகாபுக்கு மாத்திரமல்ல அபாயாவுக்கும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. நாட்டில் அபாயா தடை செய்யப்படாத விடத்தும் அரச அலுவலகங்கள், வைத்திய சாலைகள், பாடசாலைகள் மற்றும் போக்குவரத்து சேவைகளில்…