4/21 தாக்குதல்கள், முஸ்லிம்கள் மீதான வன்முறைகள்: 2289 சந்தேகநபர்கள் கைது 211 பேர் தடுப்புக் காவலில்
4/21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், அதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சோதனைகள் மற்றும் அண்மையில் வடமேல் மாகாண முஸ்லிம் கிராமங்களை மையப்படுத்தியும் அதனை ஒத்தவிதத்தில் மேலும் சில இடங்களிலும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை 2289 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 330 சிங்களவர்கள், 139 தமிழர்கள், 1820 முஸ்லிம்கள் இவ்வாறு பயங்கரவாத தடை சட்டம், அவசரகால சட்ட விதிகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச…