அரசாங்க ஊழியர்களின் ஆடை விவகாரம்: சுற்று நிருபத்தை அமுல்படுத்தாதீர்
அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட 13/2019 ஆம் இலக்க 29.05.2019 ஆம் திகதியிட்ட சுற்று நிருபத்தை அமுல்படுத்த வேண்டாமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம், கிராமிய பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரிக்கு நேற்று கடித மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி என்.டி. உடகம பொது நிர்வாக அமைச்சின் செயலாளரான தங்களுக்கு…