அரச ஊழியர்களின் ஆடை ஒழுங்கு சுற்று நிருபத்தினால் முஸ்லிம் பெண்கள் பலர் கடமைக்கு செல்லவில்லை
அரச நிறுவனங்களில் ஊழியர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த சுற்று நிருபத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் அதனை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரட்ணசிறி தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நேற்று பிற்பல் 3.50 மணியளவில் பொது நிர்வாக…