ரிஷாட், அசாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக மொத்தம் 27 முறைப்பாடுகள்
பதவி துறந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவருக்கும் எதிராக பொலிஸ் தலைமையகத்துக்கு மொத்தமாக 27 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
கடந்த நான்காம் திகதி முதல் நேற்று மாலை நான்கு மணி வரை குறித்த மூவருக்கும் எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் இரு பொலிஸ் அத்தியட்சகர்கள்…