தர்மசக்கர ஆடை விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண் மஸாஹிமா அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்
கப்பலின் சுக்கான் படம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்திருந்த முஸ்லிம் பெண்மணி பௌத்த தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்திருக்கிறார் என தவறாக ஹஸலக பொலிஸாரினால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டமையினால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளமை காரணமாக தனக்கு நஷ்டஈடு பெற்றுத்தருமாறு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலன்கொட புதலுகஸ்யாய…