முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் போலிக் குற்றச்சாட்டுகளால் விளையப் போவது என்ன?
சிங்களத்தில்: சுனந்த தேசப்பிரிய
தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலானது இலங்கை சமூக அரசியலில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்று வெடித்த குண்டுகளின் அதிர்ச்சி இலங்கையில் ஓயாத அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
பாதுகாப்பு தொடர்பாக சோடிக்கப்பட்டு வரும் கதையாடல்களால் பொதுவாக நாடே பீதியில் உறைந்துபோயுள்ளது. இதில் குறிப்பாக முஸ்லிம் சமூகமே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானமே வெட்கித் தலைகுனியுமளவுக்கு…