காத்தான்குடியில் ஒரேயொரு ஆயுதக்குழு சஹ்ரான் குழுவே
காத்தான்குடியில் முஸ்லிம் அமைப்புகள் பல இருந்தன. அதில் ஒன்றே தேசிய தவ்ஹீத் ஜமாஅத். ஆனால் சஹ்ரான் குழுவே அங்கிருந்த ஒரேயொரு ஆயுதக் குழுவாகக் காணப்பட்டதென காத்தான்குடியின் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார். கடந்த காலங்களில் முரண்பாடுகள் பல ஏற்பட்டன, அப்போது ஆமி மொய்தீன் பெயர் அதிகமாக பேசப்பட்டது. அவர் சிப்லி பாரூக் என்ற மாகாணசபை உறுப்பினருடன் இருந்தார். ஆனால் ஆமி மொய்தீன் பொலிசாருடன் தொடர்பில் இருக்கவில்லை எனவும்…