டாக்டர் ஷாபி கைது : கிழியும் முகத்திரைகள்
ஷாபி டாக்டர், இன்று இலங்கையில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த ஒரு மாதமாக நாட்டின் பிரதான பேசு பொருள்களில் தவிர்க்கமுடியாத ஒரு பெயராக அது மாறியிருக்கின்றது. காரணம், ஒரு கருத்தடை நாடகம், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக ஒரு குற்றச்சாட்டு. குற்றச்சாட்டைவிட, கருத்தடை நாடகத்தின் பெயரால் சாட்சிகள் இன்றியே இன்று ஷாபி டாக்டர் குற்றவாளியாக்கப்பட்டுவிட்டார். இது ஒரு பயங்கரமான நிலைமை.
எப்போதும் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் செய்து நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் அவர்…